திருமகள் சோதி வீதி திண்மக்கழிவகற்றல்
- karanavai centre

- Oct 19, 2019
- 1 min read
Updated: Oct 20, 2019
திருமகள் சோதி வீதியில் உள்ள வெற்றுக்காணியில் வீதிக்கு அண்மித்த பகுதியில் அகற்றப்படுகின்ற திண்மக்கழிவுகள்

திருமகள் சோதி வீதியில் காணப்படும் வெற்றுக்காணியில் வீதிக்கு அண்மித்த பகுதியில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனால் இப்பகுதி மற்றும் இவ் வீதியினைப்பயன்படுத்தும் மக்கள் பெரிதும் அசௌகரியங்களிற்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் பொலித்தீன் கழிவுகள், பம்பஸ் கழிவுகள், போத்தல்கள், சமையலைக்கழிவுகள், உணவகங்களின் கழிவுகள் போன்றன அகற்றப்படுகின்றன
பாவனையற்ற காணி என்பதுடன் காணியினது வாசலில் காணப்படும் இடத்தில் (படத்தில்காட்டப்பட்டுள்ளவாறு) உரப்பைகள் பிளாஸ்ரிக் பைகள் என்பவற்றிலும் ஓட்டோ மோட்டார்சைக்கிளில் செல்கின்ற போதும் அதிகாலை 5.00 மணி 6.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் விசனம் தொரிவித்துள்ளனர்.

திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு
காணியினது முன் வாசல்பக்கத்தில் போதியளவு இடம் காணப்பட்டதனால் இப்பகுதியில் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டதன்காரணமாக அவ்விடம் குறித்த காணிக்காரினால் மதில் , படலை (Gate) அமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.





Comments